தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சாமனூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை தூக்கி செல்வதும் அவ்வப்போது நடந்து வந்த நிலையில் இன்று அதிகாலை சிறுத்தை புலி ஒன்று ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதீ அடைந்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வன துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எனவே பொதுமக்கள் அதுவரை வனப் பகுதிக்குள் செல்லவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் எனவும் வனசரக அலுவலர் நடராஜ் கேட்டு கொண்டார். இந்நிலையில் சாமனூர் மலை பகுதியில் சிறுத்தை உள்ள காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக