பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு குறித்து துனை ஆட்சியர் திடிர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு குறித்து துனை ஆட்சியர் திடிர் ஆய்வு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் இன்று காலை  துணை ஆட்சியர் கண்ணன், திடிர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார், அதனை தொடர்ந்து மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றவர் பதிவேட்டில் உள்ள படி அனைத்து மருந்து மாத்திரைகளும் சரியான அளவில் உள்ள என ஆய்வு செய்தார்.

இதையடுத்து தொடர்ந்து தேவையான அளவிற்க்கு மருந்து மாத்திரைகள் முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள மருந்தாளுநருக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது மருத்துவர்கள், மருந்தாளுநர் முத்துசாமி, முருகேசன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad