தாட்கோ மூலமாக தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உணவக தொழில் தொடங்குவதற்க்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் தகவல் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 அக்டோபர், 2023

தாட்கோ மூலமாக தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உணவக தொழில் தொடங்குவதற்க்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் தகவல்


தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த தொழில் முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த நடமாடும் ஊர்தியில் உணவக தொழில் தொடங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 


இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 


இத்தொழிலுக்கு திட்டத்தொகையாக 3 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் மானியமும், பழங்குடியினர் மற்றும் தனி நபர்களுக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். எஞ்சிய தொகை வங்கி கடன் தொகையாக பெற வழிவகை செய்யப்படும்.


இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த தொழில் முனைவோர் தாட்கோ இணையதள முகவரியில் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். என தர்மபுரி  மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad