தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் என் மண் எனது தேசம் திட்டத்தின் அடிப்படையில் காரிமங்கலம் வட்டார அளவிலான தேசத்திற்கு மண் கலசம் வழங்கும் விழா மாட்லாம்பட்டி சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் முதல்வர் பிரேமகுமாரி தலைமையில் இன்று நடைபெற்றது.
சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கெளப்பாரள்ளி ஊராட்சி தலைவர் நந்தினி செந்தில் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.ஓய்வுபெற்ற இராணுவ வீரர் தெய்வம், அஞ்சல்துறை சார்பில் ஆய்வாளர் மகாலிங்கம், ரியல் பவுண்டேசன் இயக்குநர் செந்தில் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
உறுதிமொழி ஏற்பு, பேரணி தென்னக கலை பண்பாடு துறையின் சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி ஆகியவை இடம்பெற்றன. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிராமங்களில் சேகரிக்கப்பட்ட மண் கலசத்தில் கலக்கப்பட்டு அதனை நேரு யுவ கேந்திரா திட்ட மேற்பார்வையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக