மொரப்பூரில் உள்ள இரயில்வே மேம்பாலத்திற்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரி மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒன்றிய செயலாளர் திருலோகன் மனு அளித்தார்.
அரூரில் இருந்து தினமும் மொரப்பூர் மேம்பாலம் வழியாக தருமபுரி கிருஷ்ணகிரி ஓசூர் பெங்களூர் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு நூறுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கபடுகின்றன இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.
ஆனால் மேம்பாலத்தில் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாகவும் இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து மொரப்பூர் மேம்பாலத்திற்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் கூறியுள்ளார். தீத்தான் சி.பி.ராஜன் ஆகியோர் உடனிருந்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக