இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. மகன் தேன்கனிக்கோட்டை அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பெருமாள் மற்றும் தனம் இருவர் மட்டும் பெரியூரில் வசித்து வந்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த மாதம் மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் சமாதானப்படுத்தி மனைவியை கணவர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கணவர் மீண்டும் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார் அப்போது வீட்டிலிருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த தனம் மாடியில் உள்ள அறைக்கு ஓடியுள்ளார். அங்கு சென்ற கணவர் தனது லுங்கியால் தனத்தின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது கையை தானே அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஓடிப்போய் பெரியூர் பஸ்நிலையம் அருகில் உள்ள ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டி நள்ளிரவில் எழுப்பி தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை யாரோ தூக்கிச் சென்று விட்டனர் என்று கூறியுள்ளார்.
இவரின் பேச்சை நம்பாமல் உண்மையைக் கூறுமாறு பெருமாளிடம் விசாரித்ததில் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கோபத்தில் தனத்தை கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் கணவர் பெருமாளே கொலை செய்தது தெரிய வந்தது. கொலையை மறைக்க தனது கையை தானே அறுத்துக் கொண்டு நாடகமாடியதும் அம்பலமானது.
தகவலறிந்த பென்னாகரம் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுகொலைசெய்யப்பட்ட தனத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவர் பெருமாளை கைது செய்த போலீசார் அவரை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும் இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக