கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கோபால் சாமி திருகல்யாணம் இன்று நடைபெற இருந்த நிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையே ஒற்றுமை ஏற்படாததால் கோட்டாட்சியர் கீதா ராணி முன்னிலையில் சாமி கல்யாணம் திருவிழா நடைபெற்றது.
பிரச்சினைக்குட்பட்ட இரண்டு தரப்பினரும் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்றும் கோவில் பூசாரிகள் மட்டுமே சாமி கல்யாணத்தை நடத்தவேண்டும் என்று கோட்டாட்சியர் உத்தரவு படி நடைபெற்றது. வழக்கமாக நடைபெறும் சாமி வீதி உலாவுக்கு தடை விதிக்கப்ப்டடதால் ரத்து செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க பென்னாகரம் உதவி காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் 150- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பென்னாகரம் வட்டாட்சியர் (பொறுப்பு) அன்பு, வருவாய் ஆய்வாளர் சுஜாதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக