தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தீ விபத்து தடுப்பு குழு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (16.10.2023) நடைபெற்றது. மாவட்ட தீ விபத்து தடுப்பு குழு கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகளை கூட்டாய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சீனத்தயாரிப்பு பட்டாசுகள் (POPUP) மற்றும் வெங்காய வெடிகள் விற்பனை செய்வது, உற்பத்தி/விற்பனை நிலையங்களில் அதிகப்படியான தொழிலாளர்கள், 18 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர்களை பணியில் அமர்த்துவது மற்றும் உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் இருப்பு வைப்பது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மேலும், மேற்கூறிய விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் இந்திய வெடிமருந்து சட்டமும் விதிகளும் - 2008-ன் கீழ் உரிமதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. மேற்படி புகார்கள் கண்டறியப்பட்டால் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கீழ்க்கண்ட எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.
தருமபுரி மாவட்ட கட்டுப்பாட்டு அறை |
1077,
8903891077, |
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தருமபுரி. |
9445008135 |
வருவாய் கோட்டாட்சியர், தருமபுரி |
9445000428 |
வருவாய் கோட்டாட்சியர், அரூர் |
9445461802 |
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.பழனிதேவி, உதவி ஆணையர் (கலால்) (பொ) திரு.பி.எஸ்.கண்ணன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொ) திரு.மகாலிங்க மூர்த்தி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக