பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கணினி அறிவியல் துறை சார்பாக ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 அக்டோபர், 2023

பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கணினி அறிவியல் துறை சார்பாக ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம்.


பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கணினி அறிவியல் துறை சார்பாக ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிகழ்வில் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் பி செங்குட்டை வேலன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.


மைய இயக்குனர் பொறுப்பு பேராசிரியர் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரையாற்றினார் ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் தொடர்ந்து கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரபா அவர்கள் விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார் பின்னரும் முனைவர் முகமத் பர்வேஷ் உதவி பேராசிரியர் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம் அவர்கள் "சைபர் செக்யூரிட்டியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்" பற்றிய பயன்பாடுகள் மற்றும் வருங்காலத்தில் இது தொடர்பாக வேலை வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.


இதைத்தொடர்ந்து யமுனா முதலாம் ஆண்டு மாணவி நன்றியுரை அல்கினார் இதில் கௌரவ விரிவுரையாளர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad