தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம், செட்டி அள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி எல்லம்மாள் (வயது. 43) உடல் நிலை சரியில்லாததால் மாரண்டஅள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொண்டு வீட்டிற்க்கு நடந்து சென்று கொண்டிருந்தார், மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த மொபட் எல்லம்மாள் மீது மோதியதில் கீழே விழுந்த பலத்த காயமடைந்தார்.
உறவிணர்கள் உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் இன்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக