தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கரகத அள்ளி கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் சரவணன், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்மபுரி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, மற்றும் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடுகள் மற்றும் வரும் 2024-பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், கரகதஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராஜீமுத்துவேல் , மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக