பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 அக்டோபர், 2023

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம், தக்காளிமண்டி, 4 ரோடு, பைபாஸ் பிரிவு சாலை ஆகிய பகுதிகளில்   பேளாரஅள்ளி அரசுமேல்நிலைப் பள்ளி மாணவர்களின் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நாடகம் இன்று  நடைப்பெற்றது.

இதில் மாணவர்கள் பிளாஸ்டிக் பைகளினால் உள்ள பாஸ்பீனால் எனும் நச்சுப் பொருள் மனித மூளை மற்றும் இனப்பெருக்க செல்களில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.


மண்ணில் மக்காமல் உள்ளதால் நிலத்தடி நீர் மாசுபடுவதும், ஆறு, ஏரி, கடல் போன்றவைகளில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் மனித குலம் மட்டுமின்றி, நீர்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாதிப்படைய செய்கிறது எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டைதவிர்த்து துணிப்பை, காகிதப் பை,கண்ணாடி, சில்வர் பாத்திரம் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி இவ்வுலகை காக்க வேண்டியது நம் கடமை என்ற தலைப்பில் நாடகமாக நடித்து காட்டினர்.


இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம், உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், மற்றும் ஆசிரியர்கள் யாழினி, கலாவதி, மகேந்திரன் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் சார்பாக பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கினர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad