பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த அம்பாளப்பட்டி கிராமத்தில் அரசு பள்ளி அருகில் இருக்கும் காலி இடத்தை அதிமுக சேர்மன் உறவினர்கள் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட அம்பாளப்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்கள் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் கல்வி கற்க அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளிக்கு அருகில் சுமார் ஒரு ஏக்கர் அளவில் அரசு புறம்போக்கு காலி நிலம் உள்ளது, இந்த நிலம் எதிர்காலத்தில் பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காகவும் பள்ளி குழந்தைகள் விளையாட்டு திடல் அமைத்திடும் நோக்கில் இருந்து வருகிறது, இதனைத் தொடர்ந்து கடத்தூர் ஒன்றிய அதிமுக சேர்மன் உதயா மோகனசுந்தரம் உதவியால் பள்ளிக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தில் திடீரென ஏர் உழுது பாக்கு மர கன்றுகளை நட முயற்சித்தனர். இதை கவனித்த அம்பாளப்பட்டி ஊர் பொதுமக்கள் அரசு பள்ளிக்கு எதிர்கால தேவைக்கு ஒதுக்கப்பட்ட பொது காலி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பாக்கு மரக்கன்றுகளை நடவு செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.
பின்பு ஊர் பொதுமக்கள் அனைவரும் அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பள்ளி அருகே இருக்கும் காலி இடங்களை அளவீடு செய்து கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது, இந்த நிலையில் அதிமுக சேர்மன் உதயா மற்றும் அவரது குடும்பத்தினர் அத்துமீறி திடீரென பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பாக்கு மரக்கன்றுகளை நடவு செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும் மேலும் கடந்த கிராம சபை கூட்டத்தில் பொது இடங்களை அளவிட செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதன் அடிப்படையில் அளவீடு செய்வதற்காக தொகை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் துரிதமாக செயல்பட்டு அளவீடு செய்து அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு திடல் அமைத்துக் கொடுக்க ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக