காரிமங்கலம் அடுத்த காமலாபுரம் அரசு பள்ளியில் அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 அக்டோபர், 2023

காரிமங்கலம் அடுத்த காமலாபுரம் அரசு பள்ளியில் அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் காமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்   மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட நுகர்வோர் அமைப்பு சார்பாக உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.


பள்ளி ஆசிரியர் ரவீந்திரன் வரவேற்புடன் தலைமை ஆசிரியர் திரு.சிவலிங்கம் மற்றும் மல்லி குட்டை கிராம நிர்வாக அலுவலர் திருமதி.செல்வி  அவர்கள் முன்னிலையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. ப.ராஜகுரு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்புடன் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே. நந்தகோபால் தலைமையில், தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை  பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் கருத்துரையுடன் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் ஒருங்கிணைப்போடு பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad