இண்டூர் பவர்கிரிட் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 அக்டோபர், 2023

இண்டூர் பவர்கிரிட் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் அடுத்துள்ள இன்டூர் கிராமத்தில் உள்ள பவர் கிரிட் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் மற்றும் பவர்கிரிட் இனைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமிற்க்கு மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பவர்கிரிட் மண்டல மேலாளர் பாலு, தலைமை மேலாளர்  விவேக் சந்திரன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் பவர்கிரிட் நிறுவதை்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் சுற்று பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மருத்துவ ஒருங்கினைப்பாளர் பாலாஜி, பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், பென்னாகரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கனிமொழி, மருந்தாளுநர்கள்  முத்துசாமி, முருகேசன் மற்றும் பவர்கிரிட்  அலுவலர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad