தர்மபுரி மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி இரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிரேதம் இருப்பதாக தர்மபுரி இரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்து, உடனடியாக சம்பவ இடத்திற்க்கு சென்ற இரயில்வே போலீசார் பிரேதத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரனையில் இறந்தவர் பாலக்கோடு அண்ணா நகரை சேர்ந்த கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி சக்திவேல் (வயது.21) என்பதும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் வந்ததும் தெரிய வந்தது.
ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரோனும் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றனரா என தர்மபுரி இரயில்வே போலீசார் மற்றும் மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக