நிகழ்ச்சிக்கு பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால்,பி செட்டிஅள்ளி ஊராட்சி தலைவர் கனபதி சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாலக்கோடு சட்ட மன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சருமான கேபி. அன்பழகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
உறுதிமொழி ஏற்பு, கலைநிகழ்ச்சி பேரணி உள்ளிட்டவை இடம்பெற்றது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். 500க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளி ராஜன் முன்னாள் இராணுவ வீரர்கள் ரத்னவேல் செந்தில் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் பல்நோக்கு பணியாளர் முனியப்பன் நிகழ்ச்சி நடத்த ஒத்துழைப்பு நல்கினர். நிறைவாக பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக