தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ராதாமாரியப்பன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைப்பெற்றது.
ஊராட்சியில் பிளாஸ்டிக் கட்டுப்படுத்த மஞ்சபை திட்டம் குறித்து விழிப்புணர்வு, சுத்தமான குடிநீர் வழங்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தண்ணீர் விநியோகம் செய்தல், மத்திய ஜல்சக்தி திட்டத்தின் மூலம் சீரான குடிநீர் வழங்குதல், டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பாபுசுந்தரம், நீர்வளத் துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், கால்நடை மருத்துவர் நடராஜ், வட்டார வளர்ச்சி உதவிநிலை அலுவலர் முருகன், வார்டு கவுன்சாலர்கள், ஊராட்சி செயலாளர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக