தருமபுரி மாவட்டம் கிருஷ்னாபுரம் அருகே உள்ள கதிர் நாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகள் ரஞ்சனாதேவி (வயது. 23) இவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று மாலை தோட்டத்திற்க்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை, பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தர கோரி அவரது தாய் கிருஷ்னாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் ரஞ்சனாதேவி, தர்மபுரி பிடமனேரியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது .29) என்பவருடன் காவல் நிலையத்தில் ஆஜராகி இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் பாதுகாப்பு வேண்டும் என கூறி போலீசாரிடம் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து இரு வீட்டாரையும் சேர்ந்த பெற்றோர்களை அழைத்து சமாதனம் செய்து வைத்த போலீசார் பெற்றோர்களின் சம்மதத்துடன் பெண்னை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக