தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து வெள்ளையன் கொட்டாவூரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் காந்தி தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் காவேரி, முன்னாள் சேர்மன் மாணிக்கம், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல் கவுன்சிலர் வழக்கறிஞர் அணி பாரதி, கவுன்சிலர்கள் நாகம்மாள், இந்திராணி உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
தர்மபுரி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூட்டத்தில் பங்கேற்று பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடுகள் மற்றும் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் துணை சேர்மன் ஹபிப் முகமது, வக்கீல் பெரியசாமி, ஐடி விங் கௌதம், ரஜினி, பிடிஏ துணை தலைவர் கிருஷ்ணன், விஸ்வநாதன், மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக