இந்த நிலையில், ஆன் லைன் கேம்லிங், கிரிக்கெட் சூதாட்டம், ஆன்லைன் கடன் செயலி மூலம் வாங்கிய கடன், அறிந்த தெரிந்த நபர்களிடம் பெற்ற கடனை கட்ட முடியாத நிலை என பல்வேறு வகையிலும் சூர்யபிரகாஷ் நெருக்கடிக்குள்ளாகியிருந்தாதகவும், இந்த நிலையில் ஆன் லைன் கடன் செயலி மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாத நிலையில், சூர்யபிரகாஷ் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த செல்போன் எண்களின் வாட்ஸ்அப்களுக்கு, சூர்யா பிரகாஷ் வாங்கிய கடனை திருப்பி கட்டவில்லை எனக்கூறி, அவரது ஆதார் மற்றும் பான்கார்டுடன் ஆபாச படங்களையும் இணைத்து, மிக மோசமாக சித்தரித்து கடன் செயலி கும்பல் பரப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்து மனமுடைந்த சூர்யா பிரகாஷ் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது, கடந்த 12ம் தேதி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சூர்ய பிரகாஷ் சிகிச்சையளித்தும் பலனின்றி தற்போது உயரிழந்திருக்கிறார், என்ன தான் நடந்தது சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக