பாமகவின் தருமபுரி கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் எம்எல்ஏ ஜி.கே.மணி பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 அக்டோபர், 2023

பாமகவின் தருமபுரி கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் எம்எல்ஏ ஜி.கே.மணி பங்கேற்பு.

தருமபுரி கிழக்கு மாவட்ட பாமகவின் பொதுக்குழு கூட்டம்  அரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரசாங்கம் வரவேற்புரையாற்றினார்.


சிறப்பு விருந்தினராக பாமக கௌரவ தலைவரும் பென்னாகரம் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்கள் அமைத்தல் கிராமங்கள் தோறும் கட்சியின் கொடியேற்றி பெயர் பலகை திறக்கவேண்டும் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார், இந்நிகழ்ச்சியில்  உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் இல.வேலுசாமி,  நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சதாசிவம், மாநில இளைஞரணி தலைவர் பி.வி.செந்தில், மாவட்ட பொருலாளர் நாகேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர்கள் சிங்காரம், ராஜாமணி, குமரேசன், ஆணைமுத்து, செயலாளர்கள் சக்திவேல், சேகர், கமலஹசன், கோவிந்தன், ஊடக பேரவை மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், கோவிந்தராஜ், குறளரசன், இறுதியில் நகர செயலாளர் பெருமாள் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad