2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி மற்றும் வட்டார அளவில் நடந்து முடிந்த நிலையில் இன்று 26.10.23 தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி அலே தருமபுரி ஆகிய இடங்களில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன.
இதில் இசை, நடனம் , மொழித்திறன், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைப் பிரிவுகளில் ஒன்றிய அளவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்கள் மற்றும் அணிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அவ்வையார் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்டக் கல்வி அலுவலர்கள், மைய ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.
அதேபோல் நாளை 27.10.23 அன்று நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் பல்வேறு கலை பிரிவுகளில் ஒன்றிய அளவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற 9& 10 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
28.10.23 அன்று நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் பல்வேறு கலை பிரிவுகளில் ஒன்றிய அளவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற 11 & 12 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக