இக்கூட்டத்திற்க்கு மாநில துணைத் தலைவர் பாடி செல்வம், மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட அமைப்பு தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்ரமணி, பிரகாஷ், சின்னவன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமாள எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன, பாலக்கேடு கர்த்தரப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் சுங்க சாவடியை அகற்ற வேண்டும், சின்னாற்றின் குறுக்கே தொல்லகாது ஆற்றில் புதிய தடுப்பணை கட்டப்பட வேண்டும். பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் உயரம் 50 அடியிலிருந்து 70 அடியாக உயர்த்தி கட்ட வேண்டும், என்னேகொல் புதுர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர் ஏழுகுண்டன், மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் முருகேசன், நகர செயலாளர் ராஜா ,முன்னாள் நகர தலைவர் ராஜவேல், மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக