இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.பழனி அவர்கள் ஊழல் தடுப்பு உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர், அனைத்து நிலைகளிலும் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் உயர்ந்த நோக்கத்துடன் ஊழலை ஒழிப்பதற்கு முன்வர வேண்டும்.
நேர்மையாக செயல்படுவதற்கு நான் முன்னுதாரணமாக இருப்பேன் என்பது போன்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறு சேமிப்பு தினத்தை முன்னிட்டு சிறுசேமிப்பின் அவசியம் சிறு சேமிப்பு எதிர்காலத்தில் எப்படி உதவிகரமாக இருக்கும் என்பதை பருவத்தில் இருந்தே மாணவர்கள் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தனிமனித பாதுகாப்புக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சேமிப்பு மிகவும் அவசியமாகும். எறும்புக்களும், தேனீக்களும் எவ்வாறு சுறுசுறுப்பாக தங்களுடைய எதிர்கால தேவைக்கு சேர்த்து வைக்கிறது என்பதை மாணவர்கள் உணர்ந்து கொண்டு இளம் பருவத்திலிருந்து சேமிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அஞ்சலகம் வங்கி போன்றவைகளில் குடும்பத்தில் உள்ளவர்களும் சிறியவர்களும் சேமிக்கும் நற்பழக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, ரேக்கா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக