அதியமான் கோட்டை காலபைரவர் கோவில் அருகில் நவீன பயணிகள் பேருந்து நிழற்கூடத்தினை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் DNV.செந்தில்குமார் அவர்கள் திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

அதியமான் கோட்டை காலபைரவர் கோவில் அருகில் நவீன பயணிகள் பேருந்து நிழற்கூடத்தினை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் DNV.செந்தில்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் அதியமான் கோட்டை ஊராட்சி, காலபைரவர் கோவில் அருகில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட நவீன பயணிகள் பேருந்து நிழற்கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் DNV.செந்தில்குமார் அவர்கள்  திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில்  வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி செயற் பொறியாளர், திமுகவின் ஒன்றிய  செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், கே.எஸ்.ஆர்.சேட்டு,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பி.என்.சி.மகேஷ்குமார், கலைச்செல்வன், ஆர்.பி.முத்தமிழ், குட்டி, சவுளூர் தங்கம், விக்னேஷ் மற்றும் திமுகவினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad