தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளில் நாளை விஜய் நடிப்பில் உருவான லியோ படம் நாளை திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து என தமிழக அரசு தெரிவித்துள்ளதால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தங்கள் கோவத்தை போஸ்டர் வசனம் மூலம் காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி ஜி.எம் தியேட்டர் அருகே விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் விஜய் தற்போது அரசியலில் நுழைய முயற்சிப்பதால் தற்போதோ விஜயின் அரசியல் கனவை சிதைக்கும் வகையில் திமுக அரசு முயற்சி வருவதாகவும் இதனை குறிக்கும் வகையில் தண்ணீரில் வளர்ந்த தவளை கூட்டம் அல்ல தளபதி அன்பால் வளர்ந்த பாச கூட்டம் என ஆங்காங்கே போஸ்டர் ஒட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக