பாலக்கோடு அடுத்த பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1.கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 நவம்பர், 2023

பாலக்கோடு அடுத்த பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1.கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் பேளாரஅள்ளி ஊராட்சி  பேளாரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் மூலம் 1 கோடியே 70 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை  தலைமை ஆசிரியர் பாபுசுந்தரம் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பிணர் ஜோதி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டிட பணியை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க மாணவர்களுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.வி.‌ரங்கநாதன் ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் சரவணன், அதிமுக நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர் புதுர் சுப்ரமணி, சுகர்மில் வீரமணி, வார்டு உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரிர் ஆசிரியைகள் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad