108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் தருமபுரியில் நடைபெறுகிறது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 நவம்பர், 2023

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் தருமபுரியில் நடைபெறுகிறது.


108 சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய முற்றிலும் இலவச சேவையாகும். தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் EMRI GREEN HEALTH SERVICES நிறுவனத்துடன், அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து தமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது.

ஓட்டுனருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி

வயது: 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பாலினம்: ஆண் மற்றும் பெண்

உயரம்: 162.5 செண்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்

ஓட்டுனருக்கான தகுதிகள்: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

மாத ஊதியம்: ரூ.15235/- (மொத்த ஊதியம்).

மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: B Sc. நர்சிங், DGNM அல்லது, ANM, DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்), Life Science Graduates (B.Sc. Zoology, Botany, Bio Chemistry, Microbiology, Biotechnology)

வயது: 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

பாலினம்: ஆண் மற்றும் பெண்.

மாத ஊதியம்: ரூ.15435/- (மொத்த ஊதியம்)

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் கீழ்வருமாறு: 

நாள் : 05/11/2023 – ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : காலை 10 முதல் 3 மணி வரை

இடம் : அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை, தருமபுரி. 


மேலும் விவரங்களுக்கு : 91542 51538, 91542 51542 மற்றும் 7397724804 ஐயா எண்களில் தொடர்புகொண்டு விவரங்களை பெறலாம்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad