தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் பெங்களூரில் இருந்து தருமபுரி நோக்கி பஞ்சு மெத்தை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக திடிரென தீ பற்றி எரிய தொடங்கியது.
இதையறிந்த ஓட்டுனர் உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு பாலக்கோடு தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர். இருப்பிபினும் மெத்தை முழுவதும் எரிந்து சாம்பலானது, சரக்கு லாரியும் முற்றிலும் எரிந்து சேதமானது.
சரக்கு லாரியுடன் சேர்த்து சுமார் 10 இலட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் சேதம் குறித்தும் தீ விபத்தும் குறித்தும் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக