பாலக்கோடு அருகே எருதுகூடஹள்ளி பஸ்டாப் பகுதியில் 10 அடி நீள மலைபாம்பை உயிருடன் மீட்ட வனத்துறையினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 நவம்பர், 2023

பாலக்கோடு அருகே எருதுகூடஹள்ளி பஸ்டாப் பகுதியில் 10 அடி நீள மலைபாம்பை உயிருடன் மீட்ட வனத்துறையினர்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எருதுகூடஹள்ளி பஸ்டாப் பகுதியில்  இரவு முள்புதரில் இருந்து நெடுஞ்சாலையை கடக்க முயன்ற மலை பாம்பை பார்த்த அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உடனடியாக  பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜிக்கு தகவல்  தெரிவித்தனர். 


அவரது உத்தரவின் பேரில்  விரைந்து வந்த பாலக்கோடு வனத்துறையினர் 10அடி நீளமுள்ள மலைப்பாம்பை  இலாவகமாக உயிருடன் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக  கொண்டு சென்று விட்டனர்.


அவ்வப்போது  இறை தேடி கிராமங்களுக்குள் மலைப்பாம்புகள் வருவதால்  பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad