பென்னாகரம் அருகே மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 135 பயனாளிகளுக்கு ரூ.44.00 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் மாவட்ட ஆட்ச்சியர் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 நவம்பர், 2023

பென்னாகரம் அருகே மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 135 பயனாளிகளுக்கு ரூ.44.00 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் மாவட்ட ஆட்ச்சியர்


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து  பெரும்பாலை அருகே உள்ள பத்ரஅள்ளி ஊராட்சி, பூச்சூர் கிராமத்தில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி  தலைமையில் இன்று  நடைபெற்றது. முகாமில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி சிறப்புரையாற்றினார், பின்னர் இந்த  மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 110 பயனாளிகளுக்கு ரூ.34.47 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், வாக்காளர் அடையாள அட்டைகள், திருமணம் உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, ஈமசடங்கு உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகளையும்,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.6.27 இலட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் உபகரணங்கள், மா ஒட்டுச்செடி, தக்காளி நாற்று மற்றும் துவரை விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.26,000/- மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள்கள் என மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ. 44.00 இலட்சம்  மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  வழங்கினார்கள். 


முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, தாட்கோ, மீன்வளத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூகநலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர்   பார்வையிட்டார். இந்த முகாமில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad