பொம்மிடி அருகே 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளருக்கு 3ஆண்டு சிறை தண்டனை தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 நவம்பர், 2023

பொம்மிடி அருகே 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளருக்கு 3ஆண்டு சிறை தண்டனை தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பு.


பொம்மிடி அருகே உள்ள கேத்து ரெட்டிபட்டி ஊராட்சி செயலாளர் ரூபாய் 1500 லஞ்சம் பெற்றபோது கையில் காலமாக பிடிபட்டார், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,பொம்மிடி அருகே உள்ள கேத்துரெட்டிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் எடுத்து விடும் வேலை செய்து வந்தவர் கோபால்.


இவர் கடந்த 2009ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின்பு இவருக்கு அலுவலகத்தில் சேர வேண்டிய செட்டில்மெண்ட் தொகை பெறுவதற்கு ஊராட்சி செயலாளர் சரவணன் இடம் மனு கொடுத்துள்ளார், அப்போது அவருக்கு சேர வேண்டிய 30 ஆயிரம் செட்டில்மெண்ட் தொகையை பெறுவதற்கு ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் லஞ்சமாக ஊராட்சி செயலாளர் சரவணன் கேட்டுள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர் கோபால் தனது மகனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார், இது சம்பந்தமாக கோபால் மகன் தர்மராஜன் வயது 45 ஊராட்சி செயலாளர் சரவணனனிடம் சென்று எனது அப்பாவிற்கு சேர வேண்டிய தொகையை விரைவாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார், அதற்கு ஊராட்சி செயலாளர் சரவணன் பணம் செட்டில்மெண்ட் கொடுப்பதற்கு 1500 ரூபாய் கொடுத்தால்தான் பணியை முடித்துக் கொடுப்பதாக அவரிடம் கூறியுள்ளார்.


லஞ்சமாக 1500 ரூபாய் கொடுப்பதற்கு விருப்பமில்லாத கோபால் மற்றும் அவரது மகன் தர்மராஜன் ஆகியோர் தர்மபுரியில் உள்ள மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் சென்று புகார் தெரிவித்துள்ளார்கள், இதை அடுத்து தர்மபுரி ஊழல் தடுப்பு காவல் துறையினர் லஞ்சம் கேட்ட சரவணனை பொறி வைத்து பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.


அப்போது 24 /9/ 2009 ஆம் ஆண்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியிலிருந்து லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர் சரவணன் இடம் கோபால் மற்றும் அவரது மகன் தர்மராஜன் ஆகியோர் சென்று லஞ்சமாக ரூபாய் 1500 கொடுத்துள்ளனர்.


இதை அடுத்து அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு காவல் துறையினர் வேகமாகச் சென்று லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளர் சரவணனனை  கையும் காலுமாக பிடித்து வழக்கு பதிவு செய்தனர்.


இந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது அந்த வழக்கின் தீர்ப்பு இன்று தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்  தீர்ப்பு வழங்கினார்.


அந்த தீர்ப்பில் செட்டில்மெண்ட் பணம் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர் சரவணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டணையும், கட்ட தவறினால் கூடுதலாக 3 மாத சாதாரண சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கினார்.


1500 ரூபாய் லஞ்சம் பெற்றதற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

Post Top Ad