ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்ற இவ் நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் இரா.செல்வம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜானகிராமன், கோபிநாதம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சம்பத், எஸ்.எம்.சி தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் கைலாசம் வரவேற்று பேசினார்.
குறள் நெறிப் பேரவை செயலாளர் வெங்கடேசன் அறிக்கை வாசித்தார். மேனாள் குறள் நெறிப் பேரவை செயலாளர் பரமசிவம் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தார். தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற பாவலர் மலர்வண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா எடுக்கப்பட்டது. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழ் மகன் ப.இளங்கோ கல்வி இயல் என்ற பொருண்மையில் பேசினார்.
ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் அன்புடைமை என்ற பொருண்மையில் பேசினார். குறள் நெறிப் பேரவை பொருளாளர் இர.இலட்சுமி காந்தன், சமூக சேவகர் அர்த்தநாரி உடற்கல்வி ஆசிரியர் மு.சிவக்குமார் நன்றி கூறினர். நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக