வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2024 தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மரு.கே.எஸ்.பழனிசாமி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 நவம்பர், 2023

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2024 தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மரு.கே.எஸ்.பழனிசாமி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2024 தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மரு.கே.எஸ்.பழனிசாமி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தியதேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் இந்தியதேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2024 பணியினை மேற்பார்வையிடுவதற்கு தருமபுரி மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / மீன்வளம் மற்றும் மீனவர் நல ஆணையர் மரு.கே.எஸ்.பழனிசாமி இஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (04.11.2023) நடைபெற்றது.


பின்னர் இதுகுறித்து மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / மீன்வளம் மற்றும் மீனவர் நல ஆணையர் மரு.கே.எஸ்.பழனிசாமி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்-2024 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றது. 01.01.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் இன்று(04.11.2023), 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றது.

 

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024-ல் பெறப்படும் படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்தணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries என்ற Link மூலமும் விண்ணப்பிக்கலாம்.  மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்க உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட அறிவுருத்தப்பட்டுள்ளது. மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 -ல் பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு முறையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / மீன்வளம் மற்றும் மீனவர் நல ஆணையர் மரு.கே.எஸ்.பழனிசாமி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.கீதாராணி (தருமபுரி), திரு.வில்சன் ராஜசேகர் (அரூர்) மற்றும் தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.அ.அசோக்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளனர்.  

கருத்துகள் இல்லை:

Post Top Ad