இதன்படி வருடந்தோரும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு ஜனவரி 24,தேசிய பெண் குழந்தை தினம் அன்று பாராட்டு பத்திரமும், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அதே போன்று, வருகிற 24 ஜனவரி 2024 –ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 13 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட மேற்குறிப்பிட்டவாறு தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் 28.11.2023 வரை வரவேற்கப்படுகின்றன.
விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்/ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்/ மாவட்ட கல்வி அலுவலர்/ மாவட்ட திட்ட அலுவலர் , காவல்துறை/ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பிவைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு 24.01.2024 அன்று மாநில விருது வழங்கப்படும். என மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக