உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் கண்காட்சி வரும் 4.11.2023 வரை 12 நாட்களுக்கு ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் நடைபெறுகிறது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 நவம்பர், 2023

உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் கண்காட்சி வரும் 4.11.2023 வரை 12 நாட்களுக்கு ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் நடைபெறுகிறது.


மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், தொடர் சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் மாவட்ட அளவில் கட்டாய கண்காட்சி ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் இன்று முதல் 14.11.2023 வரை 12 நாட்களுக்கு நடைபெறுகிறது.

தருமபுரி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் 2023 - 24-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், தொடர் சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் மாவட்ட அளவில் பென்னாகரம் வட்டாரம் கூத்தப்பாடி ஊராட்சியில் ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் 03.11.2023 முதல் 14.11.2023 வரை 12 நாட்கள் கட்டாய கண்காட்சி (Mandatory Exhibition) நடைபெறுகிறது.


இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களான சிறு தானிய உணவு பொருட்கள், சணல் பைகள், பாக்கு தட்டுகள், செயற்கை ஆபரணங்கள், கால் மிதியடிகள், புளி, புடவைகள், திண்பண்டங்கள், பால்கோவா, பாப்கான், சத்துமாவு, மசாலா பொடி வகைகள், மரசெக்கு சமையல் எண்ணெய் வகைகள், சுண்டக்காய் வத்தல் மற்றும் பிற உற்பத்தி பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்படுகிறது. 


மேற்படி, கண்காட்சி இன்று முதல் 14.11.2023 வரை 12 நாட்களுக்கு நடைபெறுகிறது. பொது மக்கள் அனைவரும் கண்காட்சியை பார்வையிட்டு பொருட்களை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad