தக்காளிமண்டி எதிரில் உள்ள எம்.ஜி.எம் தாபாவில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட வரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

தக்காளிமண்டி எதிரில் உள்ள எம்.ஜி.எம் தாபாவில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட வரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு.


கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அடுத்த எச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்த பாலாஜி (வயது.32) இவர் மற்றும் இவருடன் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவிணரான சீனிவாசன் (வயது .33) என்பவருடன்  நேற்று மாலை பாலக்கோடு தக்காளி மார்க்கெட் எதிரில் உள்ள எம்.ஜி.எம்.தாபாவில் சாப்பிட சென்றனர்.

இருவரும் மது போதையில் இருந்ததால் ஓட்டலில் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டது, தகராறு முற்றிய நிலையில் ஓட்டலில் இருந்த டேபிளை கீழே தள்ளி விட்டதில் உணவு பொருட்கள் கீழே சிதறி வீணாகின. இதனால் ஆத்திரமடைந்த  ஓட்டல் உரிமையாளர் மாதுசாமி (வயது.47) ஓட்டல் ஊழியர்கள் பழனி(வயது.45) சின்னராஜ் (வயது .44) பரோட்டா மாஸ்டர் கோவிந்தன் (வயது. 43) ஆகியோர் பாலாஜி மற்றும் சீனிவாசனை தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்து பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


இதுகுறித்து இன்று பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் ஓட்டல் உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad