தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடைபெற்ற 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 நவம்பர், 2023

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடைபெற்ற 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.


தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (06.11.2023) துவக்கி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் இன்று முதல் 26.11.2023 முடிய போடப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இத்தடுப்பூசி பணிகள் எவ்வித விடுபாடுமின்றி மேற்கொள்ள 3,46,600 டோஸ்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 3,56,000 கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டுள்ளது.


மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ள 86 குழுக்கள் அமைத்து தொய்வின்றி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று பாளையம்புதூர் கிராமத்தில் 450 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாய கால்நடை வளர்ப்போர் தங்களுடைய மாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தினார்கள்.


இம்முகாமில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. சுவாமிநாதன், நல்லம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் திருமதி. மகேஸ்வரி பெரியசாமி, உதவி இயக்குநர்கள் மரு. சண்முகசுந்தரம் மற்றும் மரு. சிவகிருஷ்ணன், கால்நடை மருத்துவர்கள் மரு. ஞானசேகர், மரு. ரவி, மரு. பொற்செழியன், மரு. தசரதன், மரு. சக்திவேல், மரு. மாதப்பன் மற்றும் மரு. ஜெரோம் சார்லஸ் மற்றும் இதர துறை அலுவலர்கள் கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மரு.கண்ணதாசன், மரு.முரளி, மரு.வசந்தகுமார் மற்றும் ஆவின் பொது மேலாளர் மரு.மாலதி மற்றும் பாளையம்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.சுப்பரமணி, துணைத்தலைவர் திரு.விஜயராகவன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad