போட்டித் தேர்வு மாணவர்கள் நூலகத்தை நன்முறையில் பயன்படுத்தி உயரிய அரசுப் பணிகளில் இடம்பெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில் இரண்டாம் நிலை நூலகர் திரு.ந.ஆ.சுப்ரமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் திரு.மா.பழனி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் நூலகங்களுக்கு சென்று வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தி சிறந்த அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பட்டதாரி ஆசிரியர் திரு.ஜெ.முனிராஜ் அவர்கள் மற்றும் திரு.க.சி.தமிழ்தாசன் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி மாணவர்களுக்கு நூலகத்தின் சிறப்புகளைப் பற்றி எடுத்துரைத்தனர். விழாவின் நிறைவாக மூன்றம் நிலை நூலகர் திரு.என்.பி.முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக