ரூ.58.20 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட திட்டங்களை மக்களுக்கு திறந்து வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

ரூ.58.20 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட திட்டங்களை மக்களுக்கு திறந்து வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (22.11.2023) இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், பாரதிபுரம் மற்றும் வெள்ளே கவுண்டன்பாளையத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஓய்வறைகள், அதப்பாடி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை மற்றும் உணவு தானிய கிடங்கு என மொத்தம் ரூ.58.20 இலட்சம் மதிப்பீட்டில்திறந்து வைத்து, அதகப்பாடியில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார்கள்.


இதனை தொடர்ந்து, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தருமபுரி பாரதிபுரத்தில் அமைந்துள்ள புறநகர் கிளையில் ரூ.4.76 இலட்சம் மதிப்பீட்டில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஓய்வெடுக்க குளிரூட்டப்பட்ட ஓய்வறையினையும், வேள்ளேகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள தருமபுரி நகர் கிளையில் ரூ.3.20 இலட்சம் மதிப்பீட்டில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஓய்வெடுக்க ஓய்வெடுக்க குளிரூட்டப்பட்ட ஓய்வறையினையும் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார்கள்.


மேலும், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், அதப்பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.13 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.54 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினையும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.


முன்னதாக, தருமபுரி ஊராட்சி ஒன்றியம், அதப்பாடி ஊராட்சியில் 301.81 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.


இந்நிகழ்ச்சிகளில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, தருமபுரி நகர்மன்றத்தலைவர் திருமதி.மா.இலட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ஜி.சேகர், திரு.தாமரைச்செல்வன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம்) நிர்வாக இயக்குநர் திரு.இரா.பொன்முடி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ராஜகுரு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சிவக்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அனந்தராமன் விஜயராகவன், திருமதி.சத்யா, ஊராட்சி மன்றத்தலைவர்கள் திரு.பி.பசுவராஜ் (அதகப்பாடி), திருமதி.சுதா ரமேஷ் (இலக்கியம்பட்டி) உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad