தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை மற்றும் கால்நடை சந்தை நடப்பது வழக்கம். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இன்று நடந்த கால்நடை சந்தையில் சுமார் 300 ஆடுகளும். 150 மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது, இதில் ஆடு ஒன்று 8000 முதல் 12ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம் 45இலட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது, இதேபோல் மாடு ஒன்று 25ஆயிரம் முதல் 60ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
இதில் சுமார் 20லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது. நாட்டுக்கோழிகள் 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் 66 இலட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் வர்த்தகம் நடைப்பெற்றது. தொடர்ந்து சபரிமலைக்கு பக்தர் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதும், பக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து வருவதால் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்ததாக வியபாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக