தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 742 பயனாளிகளுக்கு ரூ.6.57 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (22.11.2023) வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமை வகித்தார்.
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆதிதிராவிடர் நலம் சார்பில் பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்ப்பட்டி, அரூர் மற்றும் பாலக்கோடு வட்டங்களை சார்ந்த 258 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்களையும், தருமபுரி வட்டத்தை சார்ந்த 68 பயனாளிகளுக்கு ரூ.35.30 இலட்சம் மதிப்பீட்டில் கிராம நத்தம் வீட்டுமனைப் பட்டாக்களையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.4.59 இலட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரண உதவித்தொகைகள், இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு நிதியுதவிகள் திருமணம் உதவித்தொகைகளையும், மகளிர் திட்டம் சார்பில் 50 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி உதவிகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூ.54.78 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்கடன் உதவிகளையும், 48 பயனாளிகளுக்கு ரூ.23.66 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகளையும், 170 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் சுய உதவிக்குழுக்கடன் உதவிகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோர் கடன் உதவிகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.5.57 இலட்சம் மதிப்பீட்டில் இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.4.18 இலட்சம் மதிப்பீட்டில் சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கிடங்கு, நிரந்தர மண்புழு உரக்கூடம், பந்தல் காய்கறி சாகுபடி அமைப்பதற்கான மானிய நிதி உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் தனி நபர் போர்வெல் அமைத்தல், டிராக்டர் மற்றும் கதிர் அடிக்கும் இயந்திரங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.42,950/- மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் சக்கர நாற்காலிகளையும், தாட்கோ சார்பில் 1 பயனாளிக்கு ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா வாகனத்திற்கான மானியத்தினையும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.72.50 இலட்சம் மதிப்பீட்டில் லாரி மற்றும் ஹாலோபிரிக்ஸ் தயாரித்தல் நிறுவனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 742 பயனாளிகளுக்கு ரூ.6.57 கோடி (ரூ.6,57,23,800/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இன்றைய தினம் நடைபெற்றுவரும் இந்த கலைஞர் நூற்றாண்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் சுமார் 750 பயனாளிகளுக்கு ரூபாய் 6.57 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
முன்பாக, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 2 பகுதிகளில் நடைபெற்ற மக்களை நாடி மாவட்ட நிர்வாகம் எனும் முன்னெடுப்பாக சிறப்பு மனுக்கள் பெறும் முகாம்களின் மூலம் பத்து, பத்து ஊராட்சிகள் என 20 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டுள்ளது. தகுதியான மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து தருமபுரி மாவட்டத்தில் சுமார் ரூ.830.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர் திட்டமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து, மாநில அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜப்பான் பன்னாட்டு நிறுவனத்தின் நிதி பெறுவதற்கான ஒப்புதல் பெறும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
விரைவில் திட்டம் தொடங்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ்நாடு மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி அதனை முழுமையாக நிறைவேற்றி வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தகுதியான நபர்களுக்கு கிடைக்கும் வகையில் தருமபுரி மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ஜி.சேகர், திரு.தாமரைச்செல்வன், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி.ராஜேஸ்வரி பெரியண்ணன், மாநில கைம்பெண் நலவாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வருவாய் வட்டாட்சியர்கள் திரு.ரமேஷ், திரு.ஜெயசெல்வம், திரு.ராதாகிருஷ்ணன், திரு.ஆறுமுகம், தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.கவிதா முருகன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக