1-ஆவது வார்டுக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி வன்னியர் தெருவில் 1.2 கிலோமீட்டர் நீளத்திற்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பது, பாப்பாரப்பட்டி பேரூராட்சி புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஏலம் போகாத கடைகளுக்கு வைப்புத் தொகையை குறைத்து நிர்ணயிப்பது, போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்காத 9- ஆவது வார்டு 6- ஆவது வார்டு 12 -ஆவது வார்டு ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து முறையான குடிநீர் வினியோகம் செய்வது, கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமித்து குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பேரூராட்சி துணைத் தலைவர் மல்லிகா ராஜி, மன்ற உறுப்பினர்கள் வி.அண்ணாமலை எஸ்.பத்மா ஆர்.தமிழ்ச்செல்வன் டி.மாலா, டி.ஹாஜிராபீ பி.பூங்குழலி, வே.விசுவநாதன், டி.ஜபியுல்லா மற்றும் எம்.தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக