பென்னாகரம் அருகே BDO வை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 நவம்பர், 2023

பென்னாகரம் அருகே BDO வை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் BDOவாக ரேணுகா அவர்கள் செயல்பட்டு வருகிறார். 


இந்நிலையில் கவுன்சிலர்களின் ஆலோசனைகளை கேட்காமல், ஒன்றிய குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்காமல், தன்னிச்சையாக செயல்படுகிறார் எனவும், கவுன்சிலர்களை அலட்சிய போக்குடன் நடத்துகிறார் எனவும் குற்றம் சாட்டி, ஒன்றிய குழு துணை தலைவர் தலைமையில் 7 ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து BDO குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பதாக தெரிவித்து சென்றனர்.


BDO வை மாற்று, மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடு என, கோசங்கள் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad