தருமபுரி மாவட்டம் கொள்ளுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது. 26). இவர் நேற்று வேலை விஷயமாக கிருஷ்ணகிரி சென்று விட்டு நேற்று மாலை மீண்டும் தர்மபுரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், காரிமங்கலம் பி.சி.ஆர் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த பொலீரோ ஜீப் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த எலக்ட்டிரிசன் வெங்கடேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக