காரிமங்கலம் ராஜதுரை லாட்ஜியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

காரிமங்கலம் ராஜதுரை லாட்ஜியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த சந்துரு (வயது.22) இவர் காரிமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ராஜதுரை என்ற தனியார் லாட்ஜில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 12ம் தேதி காலை லாட்ஜ் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றவர் மீண்டும் இரவு வீட்டிற்க்கு செல்ல மோட்டார் சைக்கிளை எடுக்க சென்ற போது, நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை, நண்பர்கள் யாரேனும் எடுத்திடுப்பார்கள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மோட்டார் சைக்கிள்  திருடு போனது தெரிய வந்தது, தனது மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தர கோரி காரிமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் சந்துரு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடு போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad