தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதி பகுதிகளில் இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி ஆய்வு செய்தார் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 நவம்பர், 2023

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதி பகுதிகளில் இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி ஆய்வு செய்தார்


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கடைவீதி பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்யும் திருமண மண்டபங்கள் வீடுகள் பேக்கரி கடைகளில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி இனிப்பு மற்றும் கார வகைகள் உற்பத்தி செய்வதை ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின்போது தற்காலிகமாக தீபாவளி பலகாரங்கள் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகள் பெற்றிருக்க வேண்டும் சான்றிதழை அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் சமையல் எண்ணெய் மற்றும் மூலப் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் பாதுகாக்கப்பட்ட குடிநீராகவும் உணவுப் பொட்டலம் இடும் பாக்கெட்களில் தயாரிப்பு தேதி முடிவு தேதி தயாரிப்பு முகவரி, நுகர்வோர் புகார் தொடர்பு எண் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும் நிறமூட்டிகள் அனுமதிக்க கூடாது பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் உபயோகிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad