தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மனுக்கள் பெறும் முகாம்களை தொடங்கி வைத்து, நேரடியாக பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மனுக்கள் பெறும் முகாம்களை தொடங்கி வைத்து, நேரடியாக பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தொம்பரகாம்பட்டி பைபாஸ், A2B அருகில் மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு மனுக்கள் பெறும் முகாம்கள் இன்று (22.11.2023) நடைபெற்றது. இச்சிறப்பு மனுக்கள் பெறும் முகாம்களை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கிவைத்து, பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். 

இச்சிறப்பு மனுக்கள் பெறும் முகாம்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமை வகித்தார். பின்னர், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் டொக்குபோதனஅள்ளி, ஏலகிரி, கம்மம்பட்டி, மானியதஅள்ளி, நாகர்கூடல், பாளையம் புதூர், பாகலஅள்ளி, சாமிசெட்டிபட்டி, சிவாடி, தொப்பூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதி மக்களுக்கான சிறப்பு மனுக்கள் முகாம் தொம்பராம்பட்டியிலும், அதியமான் கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, பூதனஅள்ளி, ஏ.ஜெட்டிஅள்ளி, இலளிகம், மிட்டாரெட்டிஅள்ளி, மாதேமங்கலம், நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, தடங்கள் உள்ளிட்ட 10 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதி மக்களுக்கான சிறப்பு மனுக்கள் முகாம் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெறுகிறது.


இதேபோல் மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து கிராமப்புற பகுதி மக்களும் பயனடையும் வகையில் சிறப்பு மனுக்கள் பெறும் முகாம்கள் நடத்த்தப்பட்டு, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறித்து உரிய விழிப்புணர்வுகள் முன்கூட்டியே பொதுமக்களிடையே வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களை கொண்டு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்காக மேற்கொள்ளப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து தனிக்கவனம் செலுத்தி துறை அதிகாரிகள் பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். அதன் அடிப்படையில் இன்றைய தினம் சிறப்பு மனுக்கள் பெறும் 20 ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் ரூ.51.00 கோடி மதிப்பீட்டிலான மக்கள் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிரின் பொருளாதார முன்னேற்றத்திற்கென அறிவித்து செயல்படுத்தியுள்ள கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் சுமார் 72% மகளிர் பயன்பெறும் வகையில் கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் வரப்பெற்ற மேல்முறையீடு விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்து, அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு அடுத்த கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். 


இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் பயன்பெறும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையினை வழங்கியுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ள மற்றுமொரு சிறப்பு திட்டமான மகளிர் கட்டணமில்லாமல் நகரபேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ப்பட்டுள்ள விடியல் பயணத்திற்கான தொகையாக சுமார் ரூ.120.00 கோடி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு தமிழ்நாடு அரசால் செலுத்தப்பட்டுள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தயதன் அடிப்படையில், கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு வட்டங்களில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களின் மூலம் 34,390 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்து, தகுதியான மனுக்களை ஏற்றுக்கொண்டு, சுமார் 13,633 நபர்கள் பயன்பெறும் வகையில் கோரிக்கைகளை நிவர்த்தி செய்துள்ளோம்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற மக்களின் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். இதுபோன்ற நலத்திட்டங்களை பொதுமக்களாகிய நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும் முன்னேற்றமடைய வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.


முன்னதாக மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாகலஅள்ளி முதல் ஆஞ்சநேயர் கோயில் வழியாக முத்தம்பட்டி வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5.21 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணியினை அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.


இந்நிகழ்வுகளின் போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ஜி.சேகர், திரு.தாமரைச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி. அ.ச. மாது சண்முகம், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.மகேஸ்வரி பெரியசாமி, துணைத்தலைவர் திருமதி.ராஜேஸ்வரி பெரியண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.சத்தியபிரியா தீப்பாஞ்சி, மாநில கைம்பெண் நலவாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் திரு.ஆர்.ஆறுமுகம் (சிவாடி), திருமதி. த.புவனேஸ்வரி மூர்த்தி (நல்லம்பள்ளி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஆறுமுகம், திரு.லோகநாதன், வட்டாட்சியர் திரு. ஆறுமுகம் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad