தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் குறைகள் ஏதேனுமிருப்பின் தங்களது குறைகளை கோரிக்கை மனுவாக முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கி வருகிறார்கள். இதன்தொடர்ச்சியாக இன்றைய தினம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 58 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இன்றைய தினம் இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர்களது சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் தட்டெழுத்து பயிற்சி உதவித்தொகையாக 5 பயனாளிகளுக்கு 87 ஆயிரத்து 900 ரூபாய் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களால் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் பிரேமா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக